வருகின்ற 22.08.2026 சனிக்கிழமை அன்று நமது AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் MRF TYRES, HYUNDAI MOTOR, VVV & SONS EDIBLE OIL(IDHAYAM), ROYAL ENFIELD, ADYAR ANADHA BHAVAN, TVS SRICHAKRA, MEENAKSHI MISSION HOSPITAL MADURAI, SENTERSOFT TECHNOLOGIES, SALCOMP போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன் 22.08.2026 அன்று காலை 9 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம், விருதுநகர் – சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் உள்ள AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.




