விருதுநகர் மாவட்டத்தில் நம் AAA பொறியியல் கல்லூரியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்களும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கத்தின் சார்பாக அடிப்படை எழுத்தறிவு பெற்றோர்களுக்கான சான்றிதழை வழங்கி, தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனையினையும் துவக்கி வைத்தனர்.


